மலையேற சென்ற இடத்தில் அரங்கேறிய விபரீதம்.!

சென்னையில் இருக்கும் அடையாற்றை சார்ந்த 31 வயதுடைய இளம் பெண்., அங்குள்ள சாஸ்திரி நகரில் இருக்கும் காவல் நிலையத்தில் தனக்கு நடந்த பிரச்சனைகள் மற்றும் இன்னல்களை எழுதி புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது., பொறியாளரான நான்., பெற்றோருடன் வசித்து வருகிறேன். கடந்த 2014 ம் வருடம் ஏற்பட்ட மூளை நரம்பு மற்றும் தசை சம்பந்தமான பிரச்சனைகளுக்காக மருத்துவரின் ஆலோசனை பெற சென்று., மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கடந்த 2017 ம் வருடத்தில் மலையேற்ற பயிற்சிக்காக ஊட்டிக்கு சென்றேன்.

அதே சமயத்தில் ஊட்டிக்கு வருகை தந்த உத்திரகன்ட் மாநிலத்தை சார்ந்த சஞ்சய் பட்டாச்சார்யா (வயது 51) என்றவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை வைத்து பேச தொடங்கிய அவர்., மலையேற்றத்தில் எடுத்த புகைப்படங்களை அனுப்புவதாக கூறி அலைபேசி எண்ணை அறிந்துகொண்டார்.

பின்னர் சில நேரம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்., அந்த வகையில்., ரிஷிகேஷ் பகுதியில் இருக்கும் மலைகளில் மலையேற்ற பயிற்சிக்கு வருமாறு கூறினார். இதனையடுத்து., ரிஷிகேஷுக்கு சென்ற போது உணவில் மயக்க மருந்து வழங்கி பலாத்காரம் செய்தார்.

மயக்கம் தெரிந்தவுடன் நிலைமை குறித்து கேட்ட போது., தனது மனைவிக்கும் அவருக்கும் இருக்கும் பிரச்சனை விரைவில் தீர்ந்து விவாகரத்து பெற்று திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்களித்தார். இதனை நம்பி இதனை நாட்கள் அமைதி காத்தேன்.

பின்னர் சிறிது மாதத்தில் கர்ப்பமடைந்த நிலையில்., விஷயத்தை அவருக்கு தெரிவிக்கவே., சஞ்சய்யின் மனைவியும் மற்றொருவரும் சேர்ந்து மிரட்டினார். இந்நிலையில்., கடந்த மாதத்தின் துவக்கத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில்., அவர்களிடம் தெரிவித்தற்கு மிரட்டுகின்றனர்.

இதனால் அவர்களின் பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.