மைனர் பெண்ணுடன் திருமண ஆசை காட்டி கொண்டாட்டம்.! அரங்கேறிய விபரீதம்.!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பரமக்குடி அருகேயுள்ள எமனேசுவரம் பகுதியை சார்ந்த 17 வயதுடைய இளம் பெண் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.

அதே பகுதியில் இருக்கும் பர்மா காலனியை சார்ந்த முத்தரசன் என்பவரின் மகன் சுதந்திர பாபு (24). இவர் 17 வயதுடைய மனைவியை காதலித்து வந்த நிலையில்., மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

திருமண ஆசையால் வாலிபரின் ஆசைக்கு இணங்கிய நிலையில்., மாணவிக்கு இரண்டு மாதங்கள் கழித்து அவர் கருவுற்று இருப்பது தெரியவந்துளளது. இதனையடுத்து தனது காதலரிடம் தாம் கர்ப்பமாக இருப்பதாகவும்., திருமணம் செய்து கொள்ள கூறியும் கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் நிலையை அறிந்தும் திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் விஷயம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மாணவியை வாலிபர் திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்ததை அடுத்து., அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.