பாகிஸ்தான் கொடிக்கு மனித மலம் பூசிய முன்னாள் ராணுவவீரர்!

கோவில்பட்டி அருகே பாகிஸ்தான் தேசியக்கொடி மீது மலம் தெளித்து தீயிட்டு கொளுத்தியுள்ளார் முன்னாள் ராணுவ வீரர்.

கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தினை சேர்ந்தவர் ஜீவானந்தம். முன்னாள் இராணுவ வீரரான இவர் 1980 முதல் 1997 வரை 17 ஆண்டுகள் இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்  சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தினை சேர்ந்த 2 வீரர்களுடன் 44பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்தும், தீவிரவாத செயல்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் இராணுவ வீரர் ஜீவானந்தம் எட்டயபுரம் பகுதியில் பாகிஸ்தான் கொடியை தெரு, தெருவாக இழுத்துச்சென்று, கொடி மீது மனித மலத்தினை தெளித்து, தீயிட்டு கொழுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் தற்கொலை படை வைத்துள்ளது என்று கவலைப்பட வேண்டாம், என்னுடைய உடம்பில் அணுஆயுத்தினை வைத்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தால் அந்த நாட்டை அழித்து, உலக வரைப்படத்தில் இருந்து, அந்த நாட்டினை நீக்கிய பெருமை இந்தியாவிற்கு வந்து சேரும் என்று கூறியுள்ளார்.