மதுரை கோரிபாயையம் பகுதியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி பார்வேர்டு பிளாக் கட்சியினர் மற்றும் தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மிகுந்த பதட்டம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.