தமிழகத்தில் காதலர்கள் சுற்றுலா வந்த இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலன் தற்கொலை செய்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இளைய சூரியன் என்ற இளைஞர், கடந்த 16ஆம் திகதி தனது காதலி மேனகாவுடன் குளிர் பிரதேசமான உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
பின்னர் இருவரும் நேற்றிரவு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது இளைய சூரியனுக்கும் அவர் காதலிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையாக மாறியுள்ளது.
இதனால் கோபமடைந்த காதலன், விடுதியில் உள்ள வேறொரு அறையில் தங்கியுள்ளார். காலை நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது எலி மருந்தை உட்கொண்டு இளைய சூரியன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் பிரேத பரிசோதனைகாக உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.