இறப்பிற்கும் மேலான தண்டனையை அனுபவித்து விடாதீர்கள்!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நமது உடல்நலத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அந்த வகையில் குடல் புற்றுநோய் பற்றி அறிவது அவசியம்., பெருங்குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக இடுப்புப் பகுதி., முதுகுத் தண்டுவடம்., கை மற்றும் கால்களுக்கு இந்த புற்றுநோயானது எலும்புகளின் வழியாக பரவும் வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்:

எலும்புகளில் வலி ஏற்படுவது., எலும்புகள் பலவீனமானது அல்லது உடைந்து போவது போன்றும்., ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும் போது. முதுகு தண்டுவடத்தில் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

மெட்டாஸ்டிக் புற்றுநோய்:

இந்த புற்றுநோய் மூலமாக எலும்புகள் உடைந்து போகும்., முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்பு புற்றுநோய் காரணமாக தண்டுவடத்துக்கும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.

முதுகுத்தண்டுவடம் பாதிப்பு:

இதன் காரணமாக எலும்புகளை பாதித்து மலம் கழிக்கும் போது தீராத வலி ஏற்படும்., பக்கவாதம் வரும் வாய்ப்பு உள்ளது. தீராத முதுகு வலி மற்றும் குடைச்சல்., மலம் கழிக்கும்போது ஏற்படும் சிரமம்., சிறுநீர் கழித்தல் கட்டுப்பாடின்றி செல்லுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் சமயத்திலேயே மருத்துவரை உடனடியாக அணுகி தேவையான சிகிச்சை செய்ய வேண்டும். இதனை கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் கோமாவிற்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டு.