அமெரிக்காவில் இந்திய தம்பதி கொலை மற்றும் தற்கொலை சம்பவத்தில் அவர்களது மகள் பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் எளித்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Sugar Land பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பின் அருகாமையில் இருந்து பெண்ணின் சடலத்தை பொலிசார் முதலில் மீட்டுள்ளனர்.
மேலும், ஆணின் சடலத்தை குடியிருப்பின் மாடியில் அமைந்துள்ள படுக்கை அறையில் இருந்தும் மீட்டுள்ளனர்.
51 வயதான ஸ்ரீனிவாஸ் தமது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர் 911 எண்ணுக்கு அழைத்து தமது குடியிருப்பு முகவரியை தெரிவித்துள்ளார்.
பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாருக்கு ஸ்ரீனிவாஸின் 16 வயது மகளே பதிலளித்துள்ளார்.
மட்டுமின்றி தந்தையின் அறைக்கு தாம் சென்று பலமுறை அழைத்ததாகவும், ஆனால் பதில் ஏதும் இல்லை என அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இக்கொடூர சம்பவம் அரங்கேறும்போது குறித்த இளம்பெண் தூக்கத்தில் இருந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு தற்கொலை மற்றும் சம்பவமாக பதிவு செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கொல்லப்பட்ட தம்பதிகளின் மகள் அளித்த மொழி முக்கியமானது என கருதப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவாஸ் மற்றும் அவரது மனைவி 46 வயதான ஷாந்தி ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறும் பொலிசார், இந்த வழக்கில் சந்தேகத்திற்குரியவர்கள் என எவரும் இருப்பதாக தெரியவில்லை எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீனிவாஸ் பணியாற்றும் நிறுவனம் பொலிசாருக்கு அளித்துள்ள அறிக்கையில், இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படலாம் என தாங்கள் அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளனர்.