இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.