தனது படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் தூக்கம் கலைந்து எழுந்தபோது தனது தூக்கம் கலைந்ததற்கான காரணத்தை அறிந்து கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இண்டியானாவைச் சேர்ந்த Michael Neil (29) தனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தபோது கட்டில் அசைந்ததால் அவரது தூக்கம் கலைந்தது.
Michael கண்விழித்தபோது, அவரது மனைவி தனது ரகசிய காதலனுடன் தனது படுக்கையிலேயே பாலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
உடனடியாக தனது அறையிலிருந்த ஒரு கத்தியை எடுத்து அந்த நபரை பலமுறை கத்தியால் குத்தியிருக்கிறார் Michael.
கத்திக் காயங்களுடன் தப்பியோடிய அந்த நபர் தனது காரில் ஏறி தப்ப முயன்றிருக்கிறார்.
அப்போது இரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்த அவரைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார்.
விரைந்து வந்த பொலிசார் அந்த நபரையும் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டதால் காயமடைந்திருந்த Michaelஐயும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
DNA உட்பட ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.