முதல்வர் செய்த செயல்! கிளம்பிய சர்ச்சை.!

திரிபுரா மாநிலம், கர்தலா பகுதிக்கு அருகே உணவு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்புவிழாவில் மத்திய உணவுப்பொருள் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, மாநில முதல்வர் பிப்லப் தேவ் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் முடிவில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காமல் முதல்வர் பிப்லப் தேவிடம், அவரது உதவியாளர், மூவர்ண பலுான்களை கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த பலூனை வானில் பறக்க விடும்படி, முதல்வர் பிப்லப் தேவ் மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியிடம், கொடுத்துள்ளார்.

மேலும் அப்பொழுது கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் , கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

இவ்வாறு தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அதற்கு மரியாதை செலுத்தாமல், பலுான்களை பறக்கவிட்டதும், அதற்கு பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததும் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.