திடீர் பரபரப்பு..! பிரபல அமைச்சர் வீட்டில் நடந்து வரும் அதிரடி சோதனை!

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு அமைந்துள்ளது.

அந்த சுற்றுவட்டார பகுதியிலேயே அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் அமைந்திருக்கிறது. அப்பகுதியில் அமைச்சருக்கு சொந்தமாக திருமண மண்டபமும் இருக்கிறது.

இந்த நிலையில் அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டையில் 5 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் சோதனை தான் என்றும், புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.