பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக ஒரு உணவு இந்தியர்களை அதுவும் குறிப்பாக தென்னிந்தியர்களின் மனதை கொள்ளையடித்து விட்டது.
ஐதரபாத்தை சேர்ந்த பாரடைஸ் புட் கோர்ட் என்ற செயின் பிரியாணி கடை, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பவம் 31ம் தேதி வரையில் மொத்தம் 70,44,289 பிரியாணிகளை விற்பனை செய்துள்ளது.
இந்த அளவிற்கு எந்த கடையிலும் விற்பனை செய்தது இல்லை. இவ்வளவு பிரியாணியை ஒரே நிறுவனம் விற்பனை செய்தது சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனை லிங்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஐதரபாத் என்கிற ஊரே பிரியாணிக்கு மிகவும் பிரபலமான இடமாகும். ஐதரபாத் பிரியாணி இந்திய முழுவதும் பிரபலம். இங்கு சுமார் 60 ஆண்டுகளாக பிரியாணி விற்பனை செய்து வரும் நிறுவனம் தான் பாரடைஸ் புட் கோர்ட் இந்த நிறுவனம் ஐதராபாத்தில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும்.