புதுச்சேரியில் நடந்த பெண்கள் கிரிக்கட் போட்டியில் ஒரு அணியில் இறங்கிய 9 பேரும் டக் அவுட் ஆகி உள்ளனர். மேலும், அந்த 9 ரன்னில் 6 ரன்களை ஒரு வீரர் மட்டும் அடிக்க, மீதம் உள்ள 3 ரன்கள் எதிரி அணி கொடுத்த உதிரி ரன் ஆகும்.
மேலும், இந்த போட்டியில் 9 வீராங்கனைகளை டக்-அவுட் ஆக்கி, 9 ரன்னில் சுருட்டி, உலகிலேயே அத்தியா கிரிக்கட் அணியாக ஒரு அணி அடையாள படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரிச்சேரியில் மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச பெண்கள் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கட் போட்டியில் மிசோரம் பெண்கள் அணி வெறும் 9 ரன்களை மட்டும் எடுத்து மிக மோசமான சாதனையைப் படைத்து உள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மிசோரம் அணி 13.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அந்த அணியின் 5வதாக களமிறங்கிய அபூர்வா பரத்வாஜ் என்ற வீராங்கனை மட்டும் தான் 6 ரன்கள் எடுத்தார்.
மற்ற 9 வீராங்கனைகளும் டக் அவுட் ஆகி வெளியேறினர். மீதம் உள்ள மூன்று ரன்கள் மத்திய பிரதேச அணி பவுலர்களால் கிடைத்த உதிரி ஆகும். பிறகு என்ன மத்திய பிரதேச அணி அடி தூள் கிளப்பி வெற்றி பெற்றது.
”அட.. நீங்க என்னப்பா இதை பொய் பெருசா போட்டுட்டு இருக்கீங்க.. நாங்க ஊரு பக்கம் ஆடும் ஆட்டத்துல, மொத்த பேரையும் டக் அவுட் ஆக்கி இருக்கோன்னு” நீங்க சொல்லுறது. என் காதுல விழுது. ஆனா அதை உலகத்துக்கு சொல்ல முடியாதே, ஏன்னா அது ஊருல, ஏரியால விளையாடுற கேங் ஆட்டம். இது ரெண்டு மாநிலத்துக்கு இஅடையில நடக்குற ஆட்டம். அதான் இவ்வளவு பில்டப்பு..