பஸ்ஸில் பயணித்த பௌத்த பிக்கு ஒருவர் திடீர் சுகயீனமாகி கை கால் மரத்து வாந்தி எடுக்கத் தொடங்கினார். அந்த பஸ்ஸில் மக்கள் நிறைந்து இருந்தாலும் பிக்குவானவருக்கு உதவ முன் வந்தவர் ஒரு முஸ்லீம் ஐயாவாகும். குறித்த தகவலை சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
பஸ்ஸில் அரைவாசிக்கு மேல் பௌத்தர்கள் இருந்தார்கள். சிலர் இவர்களை சோனிகள் என வசைபாடினாலும், அந்த மகாத்மா மட்டும் இல்லாமல் இருந்தால் அந்த பௌத்த பிக்குவானவரது உயிர் பிரிந்தும் இருக்கலாம்.
ஆனாலும் உடனடியாகவே முன் வந்த அவர் முதலுதவிகளை செய்து வைத்தியசாலைக்கு அவரது செலவிலேயே அழைத்துச் சென்றார்.
அந்த பஸ்ஸில் நானும் இருந்தேன். ஆனால் பெண்கள் பௌத்த பிக்குகளை தொடக் கூடாது என்பதால், என்னால் அவருக்கு உதவ முடியவில்லை. உதவிய அந்த இஸ்லாமிய மகாத்மாவுக்கு கோடி நன்மைகள் … நீண்ட ஆயுள் அவருக்கு கிடைக்க வேண்டும் …. நோயுற்ற ஒருவரை பராமரிப்பது என்பதே மகிமையான ஒரு செயலாகும்.