முதலில் எதில் சர்க்கரை இருக்கிறது எனப் பார்ப்போம்.
- வெள்ளை சர்க்கரை
- கரும்பு சர்க்கரை/ நாட்டு சர்க்கரை/ பனை வெல்லம்/ கருப்பட்டி/பனங்கல்கண்டு
- தேன்
- பழங்கள் (கொய்யாக்காய், அவகேடோ, நெல்லி, எலுமிச்சை, நாவற்பழம் தவிர அனைத்து பழங்களும் )
- சர்க்கரை போட்ட அல்லது போடாத பழ ஜூஸ்
- கோலா, மற்றும் ஏனைய சோடாக்கள் மற்றும் பாக்கெட்டில் அடைத்து விற்கும் அனைத்து இனிப்பு நீர் வகையறாக்கள்
- கரும்பு மற்றும் கரும்பு ஜூஸ்
- சாக்லேட், ஐஸ்கிரீம் , அனைத்து வகை ஸ்வீட்கள்
- பேக்கரியில் கிடைக்கும் அனைத்து இனிப்பு சுவையுடைய ஐட்டங்கள்
- இனிப்பு சுவை உடைய அனைத்தும்
மேலே உள்ள அனைத்தையும் ஒரு மாதம் நிறுத்திப் பார்க்கவும். குழந்தைகள் பெரியவர் என அனைவரும் டிரை செய்யலாம்.
இதனால் ஏற்படும் பலன்கள்
- குண்டானவர் எடை குறைவர்
- பிரஷர் இருப்பவர்க்கு பிரஷர் குறையும்
- சுகர் இருப்பவர்க்கு சுகர் குறையும்
- fatty liver குறையும்
- கொலஸ்டிரால், triglyceride அளவுகள் குறையும்
- நாள்பட்ட சளி, ஆஸ்துமா, சைனஸ், இன்பெக்ஷன், அலர்ஜி குறையும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- அல்சர் குறையும்
- தூக்கம் நன்றாக வரும், குறட்டை குறையும்
- பீரியட்ஸ் ரெகுலராகலாம்
- ஆட்டோ இம்யூன் பிரச்சினைகளின் தாக்கம் குறையும், மற்றும் பல.
நீங்கள் ரெடியா? ஒரு மாதம் செய்து பாருங்களேன்.
நன்றி
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbato