பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்.. விஜய் பிரபாகர் வெளியிட்ட அறிவிப்பு!

வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி யார் யாருடன் வைக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த கூட்டணியில், பாமக-விற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மேலும் சில கட்சிகளும் இணைய உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட இழுப்பறி காரணமாக இன்னும் ஒரு முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகர் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் வரும் என்று கூறினார். வருங்காலத்தில் பிரதமர் யார் என்பதை தேமுதிக முடிவு செய்யும் என கூறிய அவர், விஜயகாந்த் ஆட்சி இல்லை என்றால் எதுவும் இல்லை என்றார்.

3 சீட்டு 4 சீட்டு ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என கூறிய விஜய் பிரபாகர், தேமுதிகவின் பலம் சொந்த கட்சிகளை விட, மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளது என்று கூறினார். இதனால் தேமுதிகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.