போலீஸ் செய்த காரியத்தால் பரபரப்பு!

காட்பாடி அருகே லத்தேரி மாலீயபட்டு என்ற கிராமத்தில் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றுள்ளது. இதையொட்டி விழாக்கமிட்டி ஆடல் பாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கு பாதுகாப்பாக போலீசார் பணியில் அங்கு ஈடுபட்டனர்.அச்சயம் அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடி கொண்டிருந்தனர்.

இதை தட்டி கேட்க சதீஷ் என்ற போலீஸ்காரர் அங்கு சென்று கேட்கவே அப்போது இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர்.

இதனால், சதீஷ் மிகுந்த காயமுற்று வேலூர் அருகே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த 6 இளைஞர்களில் ஒருவர் ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர்.