திருமணம் செய்ய ஆசைப்பட்ட நிலையில் நேர்ந்த விபரீதம்…

தமிழகத்தில் காதலை தாய் கண்டித்ததால் இலங்கையை சேர்ந்த அகதி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நிரோஷ் (27). இவர் தனது தாய் ஞானத்துடன் வசித்து வந்தார். ஞானம் டெய்லர் வேலை பார்த்து வந்தார். நிரோஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இவர் ஒரு பெண்ணை காதலித்த நிலையில் அவரை திருமணம் செய்வதற்காக தனது தாயாரிடம் சம்மதம் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிரோஷ் மது அருந்தி பின்னர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.