இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் சொந்த நாட்டுக்கு திரும்பிய நிலையில் அவர் சூட்கேஸ் உள்ளே பெரிய பல்லி இருந்ததை கண்டுப்பிடித்துள்ளார்.
பிரித்தானியாவின் Chester நகரை சேர்ந்த பெண்ணொருவர் இலங்கைக்கு பயணமாக வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
அப்போது தனது சூட்கேஸை அவர் திறந்து பார்த்த போது உள்ளிருந்த குடையில் பெரிய பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அப்போது தான் இலங்கையில் தங்கியிருந்த போது அங்கிருந்த பல்லி பெண்ணின் சூட்கேசுக்குள் புகுந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறிய பெட்டியில் பல்லியை வைத்து அப்பெண் மூடினார்.
பின்னர் RSPCA எனப்படும் விலங்கு நலவாரிய தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் அளித்தார்.
நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி லியேன் கிராக் என்பவர் அங்கு வந்து பல்லியை கைப்பற்றினார்.
அவர் கூறுகையில், இலங்கையில் இருந்த பல்லி 5500 மைல் தூரம் பயணம் செய்து இங்கு வந்து விட்டது.
எங்களால் சில நேரங்களில் வெளிநாட்டிலிருந்து தவறுதலாக எடுத்து வரப்படும் மிருகங்களை மீண்டும் சொந்த நாட்டின் இயற்கை சூழலில் விடமுடிவதில்லை.
பிரித்தானியாவில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது, இதை இந்த பல்லியால் தாங்க முடியாது.
இதை இங்கு அப்படியே விடுவது, பிரித்தானியாவில் விலங்கு நலச்சட்டத்தின் படி குற்றமாகும்.
அதன்படி இந்த பல்லியை சரியாக பராமரிக்கும் அதற்கான விலங்கு நல ஊழியரிடம் கொண்டு செல்லப்படும் என கூறியுள்ளார்.