இந்திய மக்களிடையே ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையும் பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றுவார்.
அதே போல் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான இன்றும் வழக்கம்போல் உரையாற்றினார். அந்த உரையில் ‘‘மன் கி பாத் நிகழ்ச்சியில் நான் பிரதமராக பேசுவது இதுவே கடைசி முறை ஆகும்.
இன்னும் சில நாட்களில் தேர்தல் வர இருப்பதால் 3 மாதங்களுக்குப் பிறகு தான் மன் கி பாத்தில் நான் இனி பேச முடியும்.
நிச்சயம் வரும் மக்களவை தேர்தலில் வேட்பாளராக நானும் போட்டியிடுவேன் என நம்புகிறேன்.
காஷ்மீர் புல்வாமா மாவட்ட தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் மிகுந்த துயரமும், கோபமும் அடைந்துள்ளனர்.
இந்திய மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வேண்டும்’’ என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.