தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இல்லை?

ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேச போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த தொடரின் 20 ஓவர் போட்டியில் முதல் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிரபல இணையதளத்திற்கு அளித்த போட்டியில், இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார். இளம் வீரர் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் இந்த போட்டியில் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனவும், எப்படியும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியில் தோனி இடம் பெற்று விடுவார். அதனால் இளம் வீரர்களை சோதிப்பதற்கு, இந்த போட்டிகளை பயன்படுத்தலாம் எனவும், அதனால் தோனிக்கு இந்த அணியில் ஓய்வு கொடுக்கப்படும் நிலவுகிறது.

அவருக்கு பதிலாக இந்த அணியில் லோகேஷ் ராகுலுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சோபிக்காத லோகேஷ் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அணியில் இடம் பிடிப்பார் ஹார்டிக் பாண்டியா இல்லாத காரணத்தால் அவர் நிச்சயமாக இருப்பார். தோனிக்கு பதிலாக ராகுல் இடம்பெறுவார், பாண்டியா இடத்தில் மயங்க் மார்கண்டே இடம்பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவருடைய கணிப்பின்படி, இன்று விளையாடும் இந்திய அணி ஆனது, ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் அல்லது குர்னல் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே, யஜுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தார்.