ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரின் உறவினர் மூலம் தெரியவந்துள்ளது.
ஈராக்கின் சினர் பகுதியை சேர்ந்த மர்வா கிதர் (10) என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2014-ல் சினர் பகுதிக்குள் ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழைந்தனர்.
பின்னர் அங்கிருந்த அனைத்து குடும்பங்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய பின்னர் ஆண்களை உயிரோடு எரித்தார்கள்.
இதையடுத்து பெண்களை வயது வாரியாக பிரித்து சிரியாவுக்கு தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
அப்படி 10லிருந்து 20 வயது வரை உள்ள பெண்களை ஐ.எஸ் இயக்கத்தின் சீனியர்கள் தங்கள் வசப்படுத்தினார்கள்.
அப்படி தான் சிறுமி மர்வா ஒரு குழுவிடம் சிக்கினார்.
இந்நிலையில் தீவிரவாதிகள் பிடியிலிருந்து சமீபத்தில் தப்பிய மர்வாவின் அத்தை, ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோரமுகத்தை பற்றி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், என் தோழி ஒருவர் சிறுமி மர்வாவை பார்த்துள்ளார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.
மர்வா கர்ப்பமாக இருப்பது அவ்வளவு பயங்கரம் இல்லை, காரணம் அவள் போன்ற சிறுமிகளை 100-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்து பாலியல் அடிமையாக வைத்திருப்பார்கள்.
Yazidis எனப்படும் குர்தி மொழி பேசுபவர்கள் தான் நாங்கள், எங்களையும் சேர்த்து 6500 பேர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
அதில் பாதிபேருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அப்படி தான் சிறுமி மர்வாவின் தற்போதைய நிலை என்னவென்றே தெரியவில்லை.
முக்கியமாக கடத்தப்படும் சிறுமிகள், பெண்கள் பலமுறை பலரிடம் விற்கப்படுவார்கள்.
நானும் என் குடும்பத்தாரும் மர்வாவை அதிகம் மிஸ் செய்கிறோம் என கூறியுள்ளார்.