கர்ப்பிணி மேகனுக்கு மருதாணி வைத்து அழகு பார்த்த சிறுமி!

மொராக்கோவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசி மேகனுக்கு சிறுமி ஒருவர் பாரம்பரிய முறைப்படி மருதாணி வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய 7 மாத கர்ப்பிணி மனைவி மேகனுடன் 3 நாள் சுற்றுப்பயணமாக மொராக்கோவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் இரண்டாவது நாளான இன்று அட்லஸ் மலைப்பகுதியில் ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றிற்கு சென்றனர்.

அங்கு 12 முதல் 18 வயதுள்ள சிறுமிகள் படித்து வருகின்றனர். அங்கு தம்பதியினருக்கு பூங்கொத்து கொடுத்தது வரவேற்கப்பட்டது. பெண்களுக்கான கல்வி முக்கியத்துவம் குறித்து மேகன் அவர்களிடம் கலந்துரையாடினார்.

அதன்பிறகு கர்ப்பிணியை கொண்டாடும் விதமாக பாரம்பரிய முறைப்படி, 17 வயது சிறுமிக்கு மேகனின் கைகளில் மருதாணி வைத்துள்ளார். இதனை ரசித்தபடியே அவருடைய கணவர் ஹரியும் பார்த்து சிரித்துள்ளார்.

முன்னதாக மேகனுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் ஹரி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.