அரச தம்பதியினை பார்ப்பதற்காக இரண்டு மணி நேரம் குழந்தைகள் காத்திருப்பதை கேள்விப்பட்ட மேகன் கர்ப்பிணி வயிற்றுடன் ஓட முயற்சிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய மனைவி மேகனுடன் 3 நாள் அரச முறை பயணமாக மொராக்கோவிற்கு சென்றுள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று அட்லஸ் மலைப்பகுதியில் ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றிற்கு கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுமிகள், தங்கள் கைகளில் வைத்திருந்த பூக்களை கொண்டு அரச தம்பதியை நோக்கி அசைத்தனர்.
ரானியா(5) மற்றும் ரேஹன்னா (2) என்கிற இரண்டு குழந்தைகளையும் அவர்களுடைய தாய் கிளேர் மைன்ஜெம் அழைத்து வந்துள்ளார். மூன்று பேரும் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர் என உதவியாளர் கூறியதும், கர்ப்பிணி மேகன் வேகமாக ஓட முயற்சித்து அவர்களை சந்தித்தார்.
அப்போது தன்னுடைய கையில் வைக்கப்பட்டிருந்த மருதாணியை காண்பித்து, இது அழகாக இருக்கிறது அல்லவா? என கேட்டார். ஆனால் அந்த சிறுமிகள் இருவரும் பதிலளிக்க தாமதமானதால் ஹரி, கிண்டலாக சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.