சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார்.
இன்னுமொரு இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொன்னாலை வீதி மானிப்பாயைச் சேர்ந்த 22 வயதான சிவப்பிரகாசம் தனுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்களிில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதான வசந்தகுமார் நிரோசன் படுகாயம் அடைந்துள்ளார்.
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்றவர்களே விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.