திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றினால் ஒருவரை மோதி மரணமாவதற்கு காரணமாக சாரதியை இம்மாதம் 27ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் முஹித் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் காக்காமுனை, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கிண்ணியா சூரங்கால் கற்குழிப் பகுதியில் மோட்டார் சைக்கிலும், டிப்பர் வாகனமும் மோதி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஏ.எம்.இத்ரீஸ் என்ற 65 வயதுடைய என்பவரே ஸ்தலத்திலே பலியானதோடு, எட்டு வயது சிறுவனுக்கும் கால்கள் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கு காரணமாக டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸால் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.