அடிமைகளாக பயன்படுத்திய பெண்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்ன செய்தார்கள்?

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் இயக்கம் வீழ்ச்சி கண்ட நிலையில், அவர்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய பெண்களை கொடூரமாக கொலை செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளில் கடைசி கோட்டையாக திகழும் Baghuz பகுதியில் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரஷ்யா மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் சிரியா ராணுவம் முன்னேறி வருகிறது.

இந்த நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கம் ஒன்றில் வெட்டப்பட்ட 50 பெண்களின் தலைகளை கண்டெடுத்ததாக ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய பெண்களையே தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுரங்கங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் அந்த தலைகளை நிரப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Baghuz பகுதியில் நடந்த தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகளுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், இரண்டு பிரித்தானிய ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.