மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இறந்துபோன தனது கணவரின் ராணுவப்பணியில் ஈடுபட முடிவு செய்துள்ள நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜர் 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்தில் உயிரிழந்தார்.
தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், வேதனையில் இருந்து மீண்டு வந்துள்ள மனைவி கவுரி தனது கணவர் போலவே, தாய்நாட்டுக்காக இராணுவ பணியை மேற்கொள்ளவுள்ளார்.
ராணுவத்தில் சேர்வதற்கான SSB தேர்வை முதன் முறையாக எழுதி தேர்ச்சி பெறத் தவறிய கவுரி, விடாப்பிடியாக படித்து தம்மைப் போன்றவர்களுக்கான பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றார்.
வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சியில் சேரவுள்ள அவர், அடுத்த ஆண்டு லெஃப்டினன்ட் ஆக ராணுவத்தில் இணைகிறார்.