இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சனுக்கு சமீபத்தில் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தமிழ் மற்றும் இந்தியில் சில படங்களில் நடித்தவர் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
இவரது காதலர் ஜார்ஜ் பனய்யோடோ ஆவார். இவர் பிரபல தொழிலதிபரும், கோடீஸ்வரரும் ஆவார்.
நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்கவிருக்கின்ற நிலையில், படு கவர்ச்சியாக எமி ஜாக்சன் ஆடை அணிந்து போஸ் கொடுப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார்.
இதுகுறித்து எமி கூறியதாவது, ‘அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என கூறியிருக்கிறார்.