பொதுவாக எல்லா பெண்களுக்குமே கூந்தல் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டகண்ட ஆயில்கள் கெமிகெல்கள் பூசும் பழக்கத்திலிருந்து சற்று மாறுதலாக ஒரு இயற்கை முறை இது.
பொதுவாக மாசு நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், கூந்தல் உதிர்ந்து, வரண்டு போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி பொடுகு பிரச்சினையும் சேர்ந்தே வந்துவிடுகின்றது. இதனால் கூந்தல் உதிர்வு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்லகின்றது.
இந்த பிரச்சினையிலிருந்து முற்றிலும் விடபட செம்பருத்தி பூ சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.
செம்பருத்தி இலைகள் கண்டிஷனராக தலைமுடியை பொடுகிலிருந்து காப்பாற்றுகிறது.
செம்பருத்தியில் விட்டமின் ஏ,சி மற்றும் முடி வளர அடிப்படைதேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளதால் முடி வளர்ச்சியை துண்டுகின்றது. இதில் மாஸ்க் போடுவதனால் கூந்தலை மென்மையாக மாற்றுகின்றது.
தற்போது செம்பருத்தியை வைத்து செம்பருத்தி மாஸ்க் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- ஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் – 8-10
- யோகார்ட் – 3-4 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- ரோஸ்மெரி எண்ணெய் – சில துளிகள்
செய்முறை
முதலில் செம்பருத்தியின் தண்டினையும்,அடிபாகத்தில் உள்ள புற இதழ்களையும் அகற்றி விட வேண்டும்.
2.அவற்றுடன் யோகார்ட் கலந்து மிக்ஸியில் நைஸாக பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும்.தேவைக்கேற்ப நீர்விடவும்.
3.அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும்.
4.விருப்பமிருந்தால் ரோஸ்மெரியை அதனுடன் சேர்க்கலாம்.ரோஸ்மெரி எண்ணெய் கூந்தல் வளர உதவிபுரிகிறது.
இப்போது இந்த கலவையை தலை முடியின் வேர்கால்களிலிருந்து தடவ வேண்டும்.முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.
அந்த கலவையை தலைமுடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது கூந்தலின் வலிமையை அதிகப்படுத்தும்.