சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் சரண்யா. 24 வயது நிறைந்த இவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சரண்யா மீது, அதே அழகுநிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த விக்டர் என்பவர் ஆசை கொண்டு,அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்.
விக்டருக்கும் திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். மேலும் அவர் மனைவி, குழந்தையை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் காதலை ஏற்க முடியாது என்று சரண்யா மறுத்துவிட்டதால் அவர்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சரண்யா அழகு நிலையத்தில் இருந்த போது அங்கு வந்த விக்டர் காதல் தொல்லை கொடுத்த நிலையில் கடுப்பான சரண்யா, விக்டரிடம் கோபமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்டர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரண்யாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்நிலையில் பலத்த காயமடைந்த சரண்யா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
இதைத்தொடர்ந்து போலீசார் விக்டர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.