முல்லைத்தீவில் பெண் ஊழியர் மீது கொடூர தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிராந்திய சுகாதார பணிமனையில் பணி செய்யும் பெண் ஊழியர் ஒருவர் மீது வெளியில் இருந்து சென்ற இரண்டு பெண்கள் தாக்குதல் மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட குறித்த பெண் ஊழியர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளை வற்றாப்பளையைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை, வெளியில் இருந்து வந்த இரண்டு பெண்கள் குறித்த அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த அரச உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த அரச பெண் உத்தியோகத்தர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.