சாதனை படைத்த ரசித் கான்!

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் இடையே 3 டி20, 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த 3வது டி20 போட்டியிலும் 32 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. 211 ரன் இலக்குடன் இறங்கிய அயர்லாந்து அணி 178 ரன்கள எடுத்து 32 ரன் வித்தியாசத்தில் தேல்வியை தழுவியதும்.

இந்த போட்டியில் ரசித் கான் 15.6 பந்தில் கெவின் ஓ பிரனை விக்கெட் எடுத்தார். தொடர்ந்து அவர் விசிய 18வது ஓவரின் முதல் 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைந்தார்.

நேற்றைய ஆட்டத்தின் விக்கெட் :

15.6 பந்து – கெவின் ஓ பிரனை
17.1 பந்து – ஜார்ஜ் டோக்ரெல்
17.2 பந்து – சேன் கெட்காடே
17.3 பந்து – சிமி சிங்

சர்வதேச டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ரசித் கான் பெற்றுள்ளார்.