-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடித்து காட்டும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
கன்னி
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் பதட்டமடைவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்வந்துப் போகும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
-
தனுசு
தனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகள் வந்து நீங்கும் நாள்.
-
மகரம்
மகரம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
மீனம்
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.