அதிரடியாக நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்!

தமிழ் சினிமாவில் வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு.

ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என மாபெரும் நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அன்று முதல் இன்று வரை இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் நடிகரும் ,திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். அதனை தொடர்ந்து தற்போது லட்சுமி ஸ்டோர் என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்.மேலும் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனை கண்ட ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.