மாயமாய் போன தாய்! விசாரணையில் வெளியான பகீர் உண்மைகள்.!

ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்யில் வசித்து வந்தவர் அல்பர்டோ சன்சேஸ் கோமஸ். 26 வயது நிறைந்த இவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில் அல்பர்டோ தனது 66 வயது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவரது தாய் திடீரென மாயமான நிலையில், அவரது உறவினர் ஒருவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தாய் காணாமல் போன பதற்றம் இல்லாமல் இருந்த அல்பர்டோவின் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆல்பர்ட்டோ தனது தாய் கஞ்சா வாங்குவதற்கு பணம் தராததால் அவரை கொலை செய்துவிட்டதாகவும், மேலும் அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து தனது செல்லப்பிராணியான நாய்க்கு உணவாக போட்டதையும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியநிலையில், அவருக்கு மனநல பரிசோதனை நடத்தப்படும் என்றும் அதன்பிறகும் அவர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.