சிரியாவின் Baghuz பகுதியில் இறுதித் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்பகுதியில் சுரங்கங்களில் ஏராளமான பாலியல் அடிமைப் பெண்களின் தலைகள் இருந்ததைக் கண்டு பிரித்தானிய படையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அந்த இளம்பெண்களின் தலைகளுடன், உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட போராளிகளின் தலைகளும் இருந்துள்ளன.
தீவிரவாதிகள் மறைந்து கொள்வதற்காக பூமிக்கடியில் தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களுக்குள் குப்பைக் கூடைகளுக்குள் அந்த தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தாங்கள் தோற்று விடுவோம் என்பது தெரிந்ததும் தீவிரவாதிகள் சொல்ல முடியாத அளவுக்கு கோரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு நினைக்கும் போதெல்லாம் பாலியல் இன்பம் கொடுப்பதற்காக அவர்கள் பிடித்து வைத்திருந்த பாலியல் அடிமைகளாகிய இளம்பெண்களின் தலைகளை கொஞ்சம் கூட இரக்கமின்றி வெட்டி, பிரித்தானிய படைகள் பார்க்கட்டும் என்று வேண்டுமென்றே அங்கேயே போட்டிருக்கிறார்கள் அந்த கொடூரமானவர்கள்.
அங்கு சென்ற பிரித்தானியர்கள் கண்ட காட்சிகளை உயிருள்ள வரை அவர்களால் மறக்க முடியாது என்கிறார் அவர்களில் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்.