கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கனேடியர்: விசாரணையில் திருப்பம்

கனடாவில் 20 வார கர்ப்பிணி மனைவிக்கு போதை மருந்து தந்து கொலை செய்த வழக்கில் விசாரணை அடுத்த கட்டத்தில் எட்டியுள்ளது.

கனடாவில் கிறிஸ்தவ மத போதகராக செயல்பட்டு வந்தவர் பிலிப் கிராண்டின். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தமது மனைவி அன்னா கரிசா கிராண்டின்(29) குளியலறையில் மரணமடைந்து கிடப்பதாக கூறி 911 எண்ணுக்கு அழைத்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் குறித்த பெண்மணியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்னா கரிசாவின் உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில், அன்னா கரிசா மரணமடைவதற்கு முன்னர் மூன்று நாட்களாக தொடர்ந்து அவருக்கு Lorazepam என்ற மருந்து தரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிசார் பிலிப் கிராண்டினை விசாரணைக்கு அழைத்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தமக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதையும், அதனால் தமது மனைவி அன்னாவின் உடலை செயலிழக்க செய்து முடக்க முடிவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையிலேயே அன்னா கரிசா குளியலறையில் மரணமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டார்.

ஆனால் இந்த வழக்கில் பிலிப் கிராண்டின் திட்டமிட்டு தமது மனைவியை கொலை செய்துள்ளதாக நிரூபணமாகாத நிலையில்,

அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் செவ்வாய் அன்று நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.