இறந்த பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி புடவை ஏலத்திற்கு விடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அந்த புடவை இப்போது 1.30 லட்சம் ரூபாய் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் வரை 50 ஆண்டிற்கு மேலாக மிக பிரபலமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி துபாய் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது மரணமடைந்தார்.
இந்நிலையில் நேற்று இவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக மகள் ஜான்வி கபூர் அம்மா ஸ்ரீதேவியுடன் இருந்த நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில் ஸ்ரீதேவியின் புடவை ஏலத்திற்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஏலம் விட்டிருந்தார்.
இதை சென்னையைச் சேர்ந்த தனியார் இணையதளம் ஏலம் விட்டது.
40 ஆயிரத்திற்கு தொடங்கப்பட்ட இந்த ஏலம் இறுதியில் 1.30 லட்ச ரூபாய்க்கு முடிந்தது.
இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தினை தொண்டு நிறுவனத்திற்கு அளிக்க இருப்பதாக ஸ்ரீதேவியின் கணவர் தெரிவித்துள்ளார்.