நிறைவேறிய நடிகர் சத்தியராஜின் மகள் ஆசை!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆவார்.

அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்பதே திவ்யாவின் கனவாக இருந்தது.

இவர் சமீபத்தில் கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இன்று முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகின்றன.

இதன் தொடக்கவிழாவை இன்று சென்னை திருவான்மீயூர் அரசு பள்ளியில் ஆளுனர் தொடங்கி வைத்தார்.