சுவிட்சர்லாந்தில் இணைய தளம் மூலம் நட்பான பெண் ஒருவரை சொந்த குடியிருப்புக்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பெர்ன் மண்டலத்தில் குடியிருந்து வருபவர் அந்த 53 வயதான நபர். இவருக்கு இணையம் மூலம் 42 வயதான பெண்ணின் நட்பு கிட்டியுள்ளது.
சில நாட்களுக்கு பின்னர் இருவரும் நேரிடையாக சந்தித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதற்கு முன்னர் இருவரும் தங்கள் பாலியல் விருப்பங்கள் தொடர்பில் தகவல் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் திகதி மாலை Kehrsatz பகுதியில் உள்ள இவரது குடியிருப்பில் சந்தித்துக் கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.
இருவரும் திராட்சை மது அருந்தியபடியே தங்கள் பாலியல் விருப்பங்கள் குறித்து அந்த நபரின் இல்லத்தில் வைத்து விவாதித்துள்ளனர்.
தொடர்ந்து தங்கள் திட்டமிட்டபடி இருவரும் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் அந்த நபர் குறித்த பெண்மணியை கொடூரமாக தாக்கவும், பிறப்புறுப்பை சிதைப்பது போன்று முயன்றுள்ளார்.
குறித்தபெண் வலியால் துடித்த நிலையில், அந்த நபர் இவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த நபரிடம் இருந்து ஒருவழியாக தப்பிய அந்த 42 வயது பெண் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், தம்மீது எந்த குற்றவும் இல்லை எனவும், இருவரும் ஏற்கெனவே திட்டமிட்டே BDSM எனப்படும் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் இருந்து தப்பிய குறித்த பெண், முதல் ஓராண்டு காலம் தம்மால் மனதளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் தவித்ததாகவும்,
ஆனால் தற்போது மீண்டு வருவதாகவும், இனிமேல் ஆண்களை சந்திப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுவரை தாம் உளவியல் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த 53 வயது நபருக்கு 20 மாதம் சிறையும் அபராதமும் விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு வாதிட்டுள்ளது.