அலறும் பாகிஸ்தான்… 300 தீவிரவாதிகளை காவுவாங்கிய இந்திய ராணுவம்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி 2,500 துணை ராணுவ படையினர், 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து பயங்கரவாதி மோத செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இன்று இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சுமார் 1 டன் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகளை கொன்று குவித்தது இந்திய விமானப்படை.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலாகோட் மற்றும் முசாபாராபாத் இடங்களை துவம்சம் செய்தது இந்தியா.12 போர் விமானங்கள் பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் 200- 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயிஷ் இ பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், பாலகோட், முசாபார்பாத், சக்கோட்டி பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.