பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளை சூறையாடிய, இந்திய ராணுவம்!

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை யோரம் அமைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது. இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம், சுமார் 1000 கிலோ வெடிபொருள் அடங்கிய குண்டு வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.