கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஜோதி நகரை சார்ந்தவர் சபரிராஜன்., 25 வயதுடைய இவர் பொறியாளர் ஆவார். இவருக்கு முகநூலின் மூலமாக அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்., சம்பவத்தன்று மாணவிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட சபரி., மாணவியிடம் சுற்றுலா செல்வதற்கு ஆசை வார்த்தை கூறி அங்குள்ள ஊஞ்சவேலாம்பட்டிக்கு அழைத்துள்ளார்.
இவரின் அழைப்பை ஏற்ற மாணவி சுற்றுலாவிற்கு புறப்படவே., சபரி அவரது நண்பரான சதிஷ் (வயது 28)., வசந்தகுமார் (வயது 24) மற்றும் திருநாவுக்கரசு (வயது 26) ஆகியோருடன் காரில் புறப்பட்டுள்ளனர்.
அந்த நேரத்தில்., ஆள் அரவம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திய சபரி மற்றும் அவரது நண்பர்கள்., மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளனர். இதனால் பதறிப்போன மாணவி கூச்சலிடவே., நால்வரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கி., அதனை காட்சிகளாக பதிவு செய்து., அவரிடம் இருந்து 1 சவரன் நகையை பிடிங்கி., அவரை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த விஷயம் குறித்து இல்லத்திற்கு வந்த மாணவி கூறி கதறியளவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இது குறித்து சபரிராஜன்., சதிஷ் மற்றும் வசந்தகுமாரை கைது செய்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த விசாரணையில்., இது போன்ற 50 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு., பணம் பறித்தும்., காட்சிகளாக பதிவு செய்ததும் தெரியவந்தது.
முகநூலில் பழக்கமாகும் பெண்களிடம் கவர்ச்சியாக மற்றும் ஆசையை தூண்டும் வகையில் பேசும் வேலையை திருநாவுக்கரசு மேற்கொள்ள., சபரிராஜன் அலைபேசி எண் வந்தவுடன் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு பின்னர் மாணவியை சுற்றுலாவிற்கு அழைத்து கூட்டாக சில்மிஷத்தில் ஈடுபட்டு., பணம் பறிக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
தற்போது வரை இவர்களிடம் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கி சீரழிந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் வெளிவந்துள்ளது. தற்போது வரை யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால்., இவர்கள் தைரியமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த கும்பலின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்ற விசாரணையிலும்., தலைமறைவாக இருக்கும் திருநாவுக்கரசையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வந்த மாணவிக்கு தேவையான பாதுகாப்பை காவல் துறையினர் வழங்கி வருகின்றனர்.
பெண் பிள்ளைகளிடம் கைபேசியை தரும் போது கவனமாக இருங்கள்., பருவ வயதில் தடம் மாறி செல்லாமல் இருக்க அவர்களுக்கு தாய் தோழியாகவும் – தந்தை தோழனாகவும் பழகி நல்லவை எது? கெட்டவை எது? என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்….. பிள்ளைகளிடம் பேச முடியாத விஷயங்கள் குறித்தும் பேசுங்கள்.. எந்த விதமான பிரச்சனை என்றாலும்., சந்தோசம் என்றாலும் உங்களிடம் கூறும் அளவிற்கு தோழமையுடன் பழகுங்கள்., இல்லையேல் இது போன்ற பிணம் தின்னி கழுகுகளிடம் உங்கள் ஆசை., அன்பு மகள் சிக்கி கொள்ளலாம். பெற்றோர்களே உஷார்…………