இந்தியாவில் இளைஞருடன் திருமணமான பெண் ஓடிபோன நிலையில் அவரை கணவர் மற்றும் ஊர் மக்கள் பொதுவெளியில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவருடன் அப்பெண் ஓட்டம் பிடித்த நிலையில் பெண்ணின் கணவரும், ஊர் மக்களும் அவரை பிடித்தனர்
பின்னர் இருவரையும் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர்.
இது குறித்த வீடியோ வைரலான நிலையில் பொலிசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் தொடர்பாக விரைவில் விசாரணையை பொலிசார் தொடங்கவுள்ள நிலையில், இதில் சம்மந்தப்பட்ட ஆணும், பெண்ணும் இன்னும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.