இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!!

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியாவின் தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இது இந்திய மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை மந்திரி சவுத்ரி ஃபவாத் ஹூசைன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் இந்திய திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இனி இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று கூறியுள்ளார். மேலும், விளம்பரங்களையும் தவிர்க்க முடிவு செய்துள்ளது.

ஆனால், இதற்கு முன்பே அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற முடியாது என்று பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தடை விதித்திருந்தனர்.