இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகளை கொன்று குவித்தது இந்திய விமானப்படை.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை இந்தியாவின் தாக்குதலையடுத்து ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியானது. காஷ்மீர் கிராம மக்களின் வீடுகளில் இருந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஷ்மீரில் 4 இடங்களில் பாக். விமானப்படை குண்டு வீசி தாக்குதல் இந்திய விமானப்படையின் எதிர் தாக்குதலால், பாக். போர் விமானம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் விழுந்து நொறுங்கியது. காஷ்மீர் நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம், இந்திய விமான படை விரட்டி அடித்துள்ளது.

இந்நிலையில், இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டம் எட்டியுள்ளது. அம்ரித்சர் பகுதியில் விமான சேவை ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் வான் எல்லையில் பயணிகள் விமானம் பறக்கத் தடை செய்துள்ளனர். பாகிஸ்தானின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவை தொடர்ந்து லாகூர், முல்தான், பைசலாபாத், சியால்கோட் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் விமான சேவையை ரத்து செய்தது பாகிஸ்தான்.

இதனால் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வந்து செல்லக் கூடிய விமான சேவைகள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல விமானங்கள் புறப்பட்ட நாடுகளுக்கே திரும்பிச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சில விமானங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் மாற்று வழி கேட்டு காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.