எச்சரிக்கையை ரத்து செய்தது இந்தியா.!

இன்று காலை இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் நுழைந்து குண்டு வீசியுள்ளது. இந்திய ராணுவம் முகாமிட்டு இருந்த பகுதி அருகே வீசியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா எல்லையில் நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

பாதுகாப்பு காரணமாக காஷ்மீரின் எல்லையோரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதேபோல், காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. இதேபோன்று இமாச்சல பிரதேச மாநிலத்திலும் விமான நிலையங்கள் மூடப்பட்டு விட்டது. மொத்தமாக, ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட், அமிர்தசரஸ், சிம்லா, உத்தரகாண்ட், டேராடூன் உள்ளிட்ட விமான நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டது

இந்நிலையில், மூடப்பட்ட விமான நிலையங்களில் விமான சேவையை தொடங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வடமாநிலங்களில் விடுக்கப்பட்ட வான்வழி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.