நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ.அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ராஜா அந்தப் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி முடிந்து மாணவர் ராஜா, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். முன்னீர்பள்ளம் சிவன் கோவில்அருகே வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்அவரை வழிமறித்தது.
இதனால்அதிர்ச்சியடைந்த ராஜா, மோட்டார்சைக்கிளைப் போட்டு விட்டு, கால்வாய் கரை வழியாகத் தப்பி ஓடினார். ஆனால் அந்தக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராஜா பலியானார்.சம்பவ இடத்துக்கு முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து வந்துகொலையான ராஜாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பமுயன்றனர். ஆனால் பொதுமக்கள் ராஜாவின் உடலை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர்.
அவரது உடலை ஏற்ற வந்தஆம்புலன்ஸ் வேனையும்முற்றுகையிட்டுச் சிறை பிடித்ததால்பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
உடனடியாகச் சம்பவ இடத்துக்கு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட மாணவர் ராஜா உடலைப் போலீசார் மீட்டு உடற்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் கொலையாளிகளைக் கைது செய்ய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில், கடந்தசில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர்இயற்கை மரணம் அடைந்தார்.
அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, ராஜாவும் அவரது நண்பர்களும் பூக்களை வீதியில் வீசிச் சென்றனர். அப்போது ஒருவரது வீட்டில் பூ விழுந்துள்ளது.
அந்தப் பூக்களை வேண்டும் என்றே வீசியதாக 2 தரப்பினரும் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனடியாக இருதரப்பு பெரியவர்களும் பேசிச் சமரசம் செய்து வைத்தனர்.
இந்தப் பிரச்சினை காரணமாக ராஜாவை, மற்றொரு தரப்பினர் வெட்டிக்கொலை செய்ததுதெரிய வந்தது. இதைத்தொடர்ந்துதனிப்படை போலீசார், கொலையில் ஈடுபட்டது யார் எனத் தீவிர விசாரணை நடத்தியதில், சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரைப் பிடித்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் முன்னீர்பள்ளம் பகுதியில்பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.