இந்திய விமானியை கைது செய்த பிறகு இம்ரான் கான் வெளியிட்ட அறிவிப்பு!

இன்று அதிகாலை இந்தியாவின் தாக்குதலையடுத்து ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியானது. காஷ்மீர் கிராம மக்களின் வீடுகளில் இருந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஷ்மீரில் 4 இடங்களில் பாக். விமானப்படை குண்டு வீசி தாக்குதல் இந்திய விமானப்படையின் எதிர் தாக்குதலால், பாக். போர் விமானம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் விழுந்து நொறுங்கியது. காஷ்மீர் நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம், இந்திய விமான படை விரட்டி அடித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் வெளியிட்டஅதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது.

வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து உள்ளது. மற்றும் ஒரு போர் விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் விழுந்து உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சற்றுமுன் இந்திய விமானி அபினந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி உள்ளார் என்பதை இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை, கட்டாயத்தின் பேரிலே பதிலடி கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.